வேலூர் அடுத்த கொணவட்டம், பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான வேனிலிருந்து சிதறிய மாங்கனிகளை பொதுமக்கள் அல்லிச்சென்றனர்.
சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் பெங்களூரிலிருந்து மாங்கனிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். கொணவட்டம் அருகே வந்துகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழாந்த வேன் சாலையின் தடுப்பில் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் சதீஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் சாலையில் கொட்டிக்கிடந்த மாங்கனிகளை அப்பகுதி மக்கள் பைகளில் அள்ளிச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.