ரயில் டிக்கெட் புக் செய்வதில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள் - பயணிகளே இது தெரியுமா?

Update: 2025-09-16 16:04 GMT

ரயில் டிக்கெட் புக் செய்வதில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள் - பயணிகளே இது தெரியுமா?

தட்கல் டிக்கெட்டை போல பொது டிக்கெட் முன்பதிவிலும் முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் கட்டாயம் என்ற நடைமுறை அடுத்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

அந்த வகையில், அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் பொது டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் பயணி, தனது ஆதார் எண்ணை, ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குடன் இணைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வருகிறது.

தற்போது, தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய மட்டுமே இந்த விதிமுறை உள்ள நிலையில், அக்டோபரில் பொது ஒதுக்கீட்டு டிக்கெட்டுகளுக்கும் இந்த முறை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

உதாரணமாக நவம்பர் 15-ஆம் தேதி பயணிக்க நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பினால், அறுபது நாட்களுக்கு முன்பே அதாவது செப்டம்பர் 16-ஆம் தேதி காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும்.

புதிய விதியின்படி, ஆதார் சரிபார்ப்பை முடித்த ஐ.ஆர்.சி.டி.சி. பயனர்கள் மட்டுமே காலை 8 முதல் 8:15 மணி வரை, அதாவது முதல் 15 நிமிடங்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

ஆதார் இணைப்பு இல்லாத வாடிக்கையாளர்கள் அந்த நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது. 

Tags:    

மேலும் செய்திகள்