TVK Vijay Campaign | "கண்டது கழியதுக்குலாம்.." விஜய் குறித்த கேள்வி - கடுமையாக தாக்கிய அமைச்சர்
"விஜய் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடும் தாக்கு"
கடந்த 4 ஆண்டுகளில் 1,010 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 11 கோடியே 31 ஆயிரத்து 571 லட்சம் ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 34 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார். கடல் போக்குவரத்து உற்பத்தி கொள்கையின் மூலம் தூத்துக்குடியில் அமைய உள்ள புதிய கப்பல் கட்டுமான நிறுவனம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். அப்போது விஜய் திமுக அரசு மீது வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அவர் விஜயை கடுமையாக விமர்சித்தார்.