"போக்குவரத்து துறை 3200 பேருக்கு பணி" | அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்

Update: 2025-07-24 14:44 GMT

போக்குவரத்து துறையில் புதிதாக 3200 பேருக்கு பணி

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மணல்குவாரி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறையில் வரும் மாதம் 3200 பேர் புதிதாக பணிக்கு எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படாத நிலையில், அதற்கான 3000 கோடி ரூபாய் நிதி அரசிடம் இல்லையென தெரிவித்துள்ளார். மேலும், 4800 புதிய பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்