கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரைக்கு 'புவிசார் குறியீடு' - விவசாயிகள் நன்றி
கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதற்காக மத்திய மாநில அரசுகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கவுந்தம்பாடி சர்க்கரை ஆலை விவசாயிகள் தெரிவிக்கையில், இரும்பு சத்து, ஜீரண சக்தி, உடலுக்கு குளிர்ச்சி என பல்வேறு நன்மைகள் உடைய கவுந்தப்பாடி நாட்டுச்சர்க்கரைக்கு புவிசார் குறியீடு வழங்க நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்த நிலையில், அவற்றை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
கவுந்தம்பாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதால் அவற்றை சந்தைப்படுத்துதல் எளிதாக்கப்பட்டதோடு, ஏற்றுமதி அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.