| மலை ரயில் என்ஜினிலிருந்து வெளியேறிய நீராவி புகை; கண்டு ரசித்த பயணிகள்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மலை ரயில் என்ஜினில் இருந்து வெளியேறிய நீராவியை, புகைப்படம் எடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு அழகிய மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் மலை ரயில் புறப்படுவதற்கு முன்னர் எஞ்சினில் இருந்து, வெண் புகையுடன் நீராவி வெளியேறியது. இதனை ரசித்தும், புகைப்படம் எடுத்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.