மனைவியுடன் தகாத உறவு - பம்பு செட்டுக்கு பின்னால் காத்திருந்த அதிர்ச்சி

Update: 2025-12-05 03:36 GMT

நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி அருகே இரவில் பம்பு செட் அறையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர், மர்மமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரை போலீசார் கைது செய்தனர்.

கலிதீர்த்தான்பட்டியை சேர்ந்த குமரேசன் என்பவர், கடந்த மாதம் 27-ஆம் தேதி, தனது வயலில் உள்ள பம்பு செட் அறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பாப்பாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், குமரேசன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ராஜசேகர் தான், அவரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜசேகர் மனைவியும், குமரேசனும் நெருங்கிப் பழகியதாகவும், பலமுறை கண்டித்தும் இருவரும் தொடர்பை கைவிடாததால் குமரேசனை அடித்துக் கொன்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, ராஜசகேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்