பதநீர் எடுக்க போனபோது விபரீதம் - பனை மர உச்சியில் பக்கவாதத்தால் தவித்த முதியவர்

Update: 2025-06-27 02:53 GMT

பனைமரம் மீதேறிய முதியவர் பக்கவாதத்தால் பரிதவிப்பு - போராடி மீட்பு

தூத்துக்குடி சாத்தான்குளம் அருகே சாயர்புரம் பகுதியை சேர்ந்த பனைமரம் ஏறும் தொழிலாளரும், 64 வயது முதியவருமான சாலமன் என்பவர், பனைமரத்தில் ஏறியிருந்த போது, பக்கவாதம் ஏற்பட்டு தவித்த நிலையில் அவர், பத்திரமாக மீட்கப்பட்டார். பதநீர் இறக்குவதற்காக சாலமன் பனைமரத்தில் ஏறிய நிலையில், அவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு, மரத்தில் இருந்து கீழே விழும் நிலையில் பரிதவித்தார். இதையடுத்து, தீயணைப்புத்துறையினர் உடன் சேர்ந்து, பனைமரம் ஏறத் தெரிந்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், முதியவரை பனை மட்டை உள்ளிட்டவை உடன் சேர்த்து கட்டி முதியவரை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, பத்திரமாக மீட்க பெரிதும் உதவினார். பனைமரத் தொழிலாளர்களின் இத்தகைய நிலைமையை கருத்தில் கொண்டு, அரசு சிறப்பு கவனம் செலுத்தி மருத்துவ காப்பீடு மற்றும் நிவாரணங்கள் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்