ஆபத்தின் அறிகுறியா? - செத்து கொத்து கொத்தாக கரை ஒதுங்குவதால் அதிர்ச்சி | tortoise | alivtortoise

Update: 2025-02-28 06:53 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமைகள் கொத்துக் கொத்தாக இறந்து கரை ஒதுங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆழ்கடலில் வசிக்கும் இவை, இனப்பெருக்க காலத்தில் முட்டையிடுவதற்காக கரைக்கு வந்து செல்லும். தொழிற்சாலை கழிவுநீர், மீன்பிடி வலைகள் மற்றும் கப்பல், படகுகளின் என்ஜீனில் சிக்கி அடிபட்டு இந்த ஆமைகள் இறக்கின்றன. கரை ஒதுங்கிய ஆமைகளால் திருமுல்லைவாசல், தொடுவாய் கூழையார் பழையார் உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இறந்த சில ஆமைகளை வனத்துறையினர் ஆய்வுக்காக கொண்டு சென்ற நிலையில், மீதமுள்ள ஆமைகளை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்