Today Headlines | காலை 9 மணி தலைப்புச்செய்திகள் (22.09.2025) 9 AM Headlines | ThanthiTV
- நாடு முழுவதும் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது...12, 28 சதவீத வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு நடைமுறைக்கு வந்தது...
- பால் பொருட்கள், பென்சில், நோட்டு புத்தகங்களுக்கு வரி விலக்கு அமலானது....உயிர் காக்கும் மருந்துகள், தனிநபர் ஆயுள் மற்றும் காப்பீடு பிரீமியம்களுக்கும் ஜீரோ வரி அமலுக்கு வந்தது....
- ஜிஎஸ்டி குறைப்பு அமல் ஆன நிலையில், பழைய MRP-ல் பொருட்கள் விற்பனை செய்யக்கூடும் என தேசிய நுகர்வோர் உதவி மையம் எச்சரித்துள்ளது...பழைய விலையிலேயே பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், புகார் அளிக்க வழிகாட்டுதலும் வெளியிட்டுள்ளது...
- ஈரோட்டில் வெளுத்து வாங்கிய கனமழையால், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது...ஈரோடு ரயில் நிலையத்திலும் மழைநீர் தேங்கிய நிலையில், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்...
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது...சேலம் செல்லும் சாலையில் குளம்போல் தேங்கி நின்ற மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்...