Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05.01.2026) | 7 PM Headlines | Thanthi TV

Update: 2026-01-05 13:57 GMT
  • தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் “உலகம் உங்கள் கையில்“ திட்டம்... சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...
  • மாணவர்களுக்கு டிகிரி மட்டும் போதாது, டெக்னாலஜிக்கு ஏற்றபடி அப்டேட் ஆக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்... வளர்ச்சிகளை குறைசொல்வது முட்டாள்களின் எண்ணம் எனவும், முதல்வர் கூறினார்...
  • பொங்கல் பரிசு தொகுப்புக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது... பொங்கல் தொகுப்புக்காக மொத்தம் 6 ஆயிரத்து 687 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது...
  • மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் மேலும் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்... ஏற்கனவே நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
  • தங்கம் விலை காலையில் 640 ரூபாய் கூடிய நிலையில், மாலை மீண்டும் 640 ரூபாய் உயர்ந்தது... ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
Tags:    

மேலும் செய்திகள்