இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23.07.2025) | 11 PM Headlines | ThanthiTV
பெரம்பலூர் மாவட்டம், வேப்பன்தட்டை கிராமத்தில், பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில், தேர் செல்ல எதிர்ப்பு தெரிவிக்கும் விவகாரம்...
தெருவுக்குள் தேர் செல்ல வேண்டும் என்றும், தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
மறைந்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் உடல், ஆலப்புழாவில் அரசு மரியாதையுடன் தகனம்...
அமைச்சர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி...
ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்த விவாதம் மக்களவையில் ஜூலை 28 தேதி தொடங்க வாய்ப்பு...
பிரதமர் மோடி முன்னிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளிக்க உள்ளதாக தகவல்...
சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா சாமி தரிசனம்...
தனது 50வது பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜை செய்து வழிபாடு...
போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்தான்புல்லில் ரஷ்யா - உக்ரைன் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடக்கம்...
போர்க் கைதிகள் மற்றும் இறந்த வீரர்களின் உடல்கள் பரிமாற்றம் குறித்தும் பேச்சு...
ஜார்ஜியாவில் நடந்து வரும் செஸ் உலகக்கோப்பை மகளிர் பிரிவின் அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை திவ்யா தேஸ்முக் அசத்தல் வெற்றி...
எலைட் செஸ் தொடர் ஒன்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை என்ற பெருமையும் பெற்றார்...
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட்டில், பேட்டிங்கின்போது ரிஷப் பண்ட் காயம்...
38 ரன்கள் எடுத்திருந்த நிலையில், காலில் காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக வெளியேறினார்...