TNPSC Group 1|குரூப்-1 தேர்வு மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மனிதநேய IAS கல்வி மையம்
மனிதநேய ஐஏஎஸ் கல்வி மையம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய ஐஏஎஸ் கல்வி மையம் சார்பில், குரூப்-1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மனிதநேய இலவச ஐஏஎஸ் கல்வி மையத்தின் தலைவர் சைதை துரைசாமி, ஒய்வு பெற்ற காவல்துறை தலைவர் DGP அலெக்சாண்டர் கலந்து கொண்டு 525க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தலா ருபாய் பத்தாயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கினர். குரூப்-1 முதன்மைத் தேர்விற்கான பாடக்குறிப்புகள் மற்றும் காணொளிகள் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் மனிதநேய இலவச ஐஏஎஸ் கல்வி மைய வலைதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.