Tiruppur Dowry Case | ரிதன்யா போலவே பிரீத்திக்கும் நடந்த கொடுமை - நெஞ்சை உலுக்கும் கதறல்..

Update: 2025-08-07 09:01 GMT

Tiruppur Dowry Case | ரிதன்யா போலவே பிரீத்திக்கும் நடந்த கொடுமை - நெஞ்சை உலுக்கும் கதறல்..

வரதட்சணை கொடுமை - பெண் தற்கொலை - கணவர் உள்பட 3 பேர் கைது

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பெண்ணின் கணவர் , மாமியார் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர். பிரண்ட்ஸ் கார்டன் பகுதியை சேர்ந்த சுகந்தி என்பவரது மகள் பிரீத்திக்கும், ஈரோட்டை சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்து உள்ளது. இந்நிலையில் 50 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்தியதால் மன உளைச்சலில் இருந்த பிரீத்தி கடந்த 6ம் தேதி தனது தாய் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே பெண்ணின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யகோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டதில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது பிரீத்தியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்