Thunder || திடீரென பறந்த கல்லூரி மாணவர் - ஆளே அடையாளம் தெரியாமல் கருக்கிய மின்னல்
சென்னை பாடி அருகே மொட்டை மாடியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முகப்பேறு மேற்கு ஆறாவது ப்ளாக் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் முகுந்தன். இவர் பாடி பகுதியில் உள்ள நண்பரை இன்று மாலை சந்திக்க சென்ற போது, மொட்டை மாடியில் நின்றுள்ளார். அப்போது இடியுடன் மழை பெய்த நிலையில், மின்னல் தாக்கி முகுந்தன் தூக்கி வீசப்பட்டார். அவரது செல்போனும் தீப்பற்றி எரிந்தது. முகுந்தன் செல்போன் பேசிக் கொண்டிருந்ததால், மின்னல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்த தென்னை மரமும் தீப்பற்றி எரிந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.