வீட்டுக்கு கூப்பிட்ட இங்கிலீஷ் டீச்சர்... தனியாக சென்ற மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருவாரூரில், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 வகுப்பு மாணவர்கள் இருவரை, விடைத்தாள் திருத்துவதற்கு உதவி செய்யுமாறு தனது வீட்டிற்கு ஆங்கில ஆசிரியர் வரவழைத்துள்ளார். அப்போது பாலியல் சீண்டலில் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆங்கில ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.