உச்சகட்ட பரபரப்பில் திருவள்ளூர் - மொத்தமாக சுற்றி வளைத்த போலீசார்

Update: 2025-07-19 05:45 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை பிடிக்க தமிழக - ஆந்திர மாநில எல்லையான எளாவூர் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோவில் வழக்குபதிந்து, மாவட்ட எஸ்பி தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் உட்பட 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். சம்பவம் நடைபெற்று 7 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை என சிறுமியின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, எளாவூர் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதுடன், மாவட்டம் முழுவதும் உள்ள தமிழக எல்லைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்