திருத்தணி முருகன் கோவில் - 45 நாட்களில் ரூ.2.09 கோடி உண்டியல் வருவாய்

Update: 2025-12-27 06:15 GMT

திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 45 நாட்களில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 9 லட்சம் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது. மாதந்தோறும் நடைபெறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர். இதில், உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 9 லட்சத்து 51 ஆயிரத்து 249 ரூபாய் வசூலாகியுள்ளது. மேலும், 794 கிராம் தங்கமும், 15 ஆயிரத்து 128 கிராம் வெள்ளியும் பக்தர்களின் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்