அரசு ஹாஸ்பிடலில் துணையாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டல்

Update: 2025-12-27 07:22 GMT

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராமகிருஷ்ணன் என்ற இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாககுடியை சேர்ந்த ராமகிருஷ்ணன், அரசு மருத்துவமனை வார்டில் உறவினருக்கு துணையாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து ராமகிருஷ்ணனின் செல்போனை ஆய்வு செய்த போது, பெண்களை படம் பிடித்து ஆபாசமாக சித்தரிப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, செல்போனை பறிமுதல் செய்த போலீசார், ராமகிருஷ்ணனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்