Ariyalur Sivan Temple | பிரபல கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு
அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி திருட்டு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி சிவன் கோயிலில், அம்மன் கழுத்தில் இருந்த 3 கிராம் தங்க தாலி திருடப்பட்டது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோயிலில் மர்ம நபர்கள் கதவை உடைத்து கம்பிகளை அறுத்து, திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.