Accident | மாடு மேய்க்கச் சென்ற பெண் மீது கவிழ்ந்த லாரி - உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு
சாலையில் நடந்து சென்ற போது கோர விபத்து
லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநரும் நிகழ்விடத்திலேயே பலி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, சாலையில் நடந்து சென்ற பெண் மீது லாரி கவிழ்ந்ததில், உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா பகுதியைச் சேர்ந்த தேவி. இவர் மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்ற போது, ஆந்திர மாநிலம் பலமனேரியிலிருந்து கோழி தீவனங்களை ஏற்றி வந்த லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற தேவி மீது சாய்ந்தது. இதில் அவர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், லாரியை ஓட்டி வந்த பலமனேரி பகுதியைச் சேர்ந்த பைசுல்லாவும் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.