Tiruppur | காலையில் கைதாகி ஜாமினில் வந்த மளிகை கடைக்காரர் மாலையில் கைது - சுவாரஸ்ய சம்பவம்

Update: 2025-12-27 09:34 GMT

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் காலையில் புகையிலை பொருள்கள் வைத்திருந்ததாக கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்ட மளிகை கடைக்காரர், மீண்டும் மாலையில் வேறொரு வழக்கில் சிக்கிய சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற்றது.

அவிநாசி அருகே உள்ள பெருமாநல்லூரை சேர்ந்த மளிகை கடைக்காரர் லசாமா ராம். இவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், பெருமாநல்லூரை அடுத்து பொடாராம்பாளையம் பிரிவு அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, உரிய ஆவணங்களின்றி 53 லட்ச ரூபாய் எடுத்து வந்ததாக லசாரா ராம் மீண்டும் போலீசில் சிக்கினார்.

பணத்தை பறிமுதல் செய்த போலீசார், கோவை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அதை ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்