Thiruporur Murugan | நெய் தீபங்களில் குளித்த திருப்போரூர் முருகன்.. களைகட்டிய அன்னாபிஷேக கூட்டம்
முருகன் கோவில் - சிறப்பாக நடைபெற்ற அன்னாபிஷேகம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலில், ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நெய் தீபம் ஏந்தி, கொடிமரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்தனர். மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானமும் பெற்றுக் கொண்டனர்.