``ரொம்ப டார்ச்சர் பண்றாங்க பா''.. கல்யாணம் முடிந்த 3 மாதத்தில் மூளை நரம்பு வெடித்து புதுப்பெண் மரணம்

Update: 2025-07-09 03:36 GMT

ஆன்மீகச் சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் கொள்ளுப்பேத்தி திருமணமாகி மூன்று மாதத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். சென்னை கோயம்பேடு, பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் மகள் கவிதா சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த ஓம் கணபதியின் மகன் நாகர்ஜூன் என்பவருக்கும் கவிதாவிற்கு திருமணம் நடைபெற்றது. நாகர்ஜூன் ஜபல்பூர் பகுதியில் ராணுவ அதிகாரியாக உள்ள நிலையில், கவிதாவை அங்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் கவிதாவிற்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்