தடையாக இருந்த தடுப்புச்சுவர் தகர்த்து எறிந்த தவேகவினர்

Update: 2025-08-19 12:07 GMT

மதுரை, பாரபத்தியில் வரும் 21ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. போக்குவரத்து பாதைக்கு இடையூறாக இருக்கும் தடுப்புச் சுவர்களை த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.

மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகே சாலைகள் நடுவே பல கிலோமீட்டர் தூரம் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான தடுப்பு சுவர் வேலி உள்ளது. இதனை அகற்ற தேசிய நெடுஞ்சாலைக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில் ஜேசிபி எந்திரத்தின் மூலம் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பு வேலி சுவர்கள் அகற்றப்பட்டது. மாநாடு முடிந்த பின் மீண்டும் தடுப்பு வேலி சுவர்கள் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்