காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அனந்த சரஸ் திருக்குளத்தில் நீராடி சென்றனர். வைகாசி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளில் நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தை ஒட்டி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் அனந்த சரஸ் திருக்குளத்தில் மூழ்கிய பிரணஹாதி வரதருடன் திரளான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டவாறு, குளத்தில் மூழ்கி புனித நீராடி, சுவாமியை தரிசனம் செய்தனர்.