``மன உளைச்சல்.. சொல்ல முடியாத வேதனையா இருக்கு..'' - ஜி.கே.மணி சொன்ன வார்த்தை
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே வெடித்துள்ள மோதல் மன உளைச்சலை தந்துள்ளதாக பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் ராமதாஸுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர். முன்னதாக தந்தி டிவிக்கு பேட்டி அளித்த ஜி.கே.மணி, பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறினார்.