தேரை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிட்ட பக்தர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் ஆலய ஆடிப்பூரத் தேரோட்டத்தின் போது, ஆம்புலன்ஸ்க்கு பக்தர்கள் வழிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாடானை பேருந்து நிலையத்தில் இருந்து தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு ரத வீதியில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது, அவ்வழியாக ஆம்புலன்ஸ் வந்த நிலையில், தேரின் வட சங்கிலியை தூக்கியபடி சாலை ஓரத்தில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி விட்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது.