"எவ்ளோ பெரிய நிறுவனமா இருந்தாலும் 6 மாசத்துல முடிச்சிடுங்க" அதிரடி உத்தரவு
சென்னை புழல் பகுதியில் விதிகளை மீறி குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் மீது 6 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளாங்காடுபாக்கம் மற்றும் சென்றம்பாக்கம் ஊராட்சிகளில், 154 தொழில் நிறுவனங்கள் விதிகளை மீறி குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.