அனைவருக்கும் நன்றி - விஷால் வெளியிட்ட அறிக்கை

Update: 2025-08-31 04:22 GMT

தனது பிறந்தநாளுக்கும், நிச்சயதார்த்தத்துக்கும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது பிறந்தநாளை ஒட்டி, பல்வேறு இடங்களில் அன்னதானம், நலத்திட்டங்கள் வழங்கிய திரை நட்சத்திரங்கள் யோகிபாபு சூப்பர் சுப்புராயன் ஆகியோருக்கும், பல்வேறு மாநிலங்களில் உள்ள ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு, வாழ்வின் புதிய அத்தியாயமும் அமைந்த இந்நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியமைத்த அனைவருக்கும் நன்றிகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்