தை அமாவாசை... மூதாதையர்களுக்கு திதி - முக்கடல் கூடும் குமரியில் திரண்ட மக்கள்
தை அமாவாசையை முன்னிட்டு, கன்னியாகுமரி கடலில் புனித நீராடுவதற்காக அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறையில் புனித நீராடிய பக்தர்கள், பூஜை செய்த பச்சரிசி,எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.