Temple Festival | மழை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா.. காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
Temple Festival | மழை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா.. காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மழை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா கோலாகலம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்திலுள்ள ஆயக்காரன்புலத்தில், மழை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றது. ஆடித் திருவிழா கடந்த வாரம் தொடங்கிய நிலையில், தற்போது தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சாமி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதி உலா வந்தார். தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. இதனையடுத்து பக்தர்கள் காவடி எடுத்தும், மாவிளக்கு போட்டும் நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும் சிறப்பு கலைநிகழ்ச்சியும், வானவேடிக்கையும் நடைபெற்றது.