TN Police | மாஸ் காட்டிய தமிழ்நாடு போலீஸ் - 24 அதிகாரிகளுக்கு கிடைத்த கௌரவம்

Update: 2026-01-26 05:28 GMT

தமிழகத்தைச் சேர்ந்த 24 காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருதுகள்

சிறப்பாக பணியாற்றியதாக தமிழகத்தை சேர்ந்த 24 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது...

ஐஜி மகேஸ்வரி, டி.எஸ்.பி குமரவேலு, துணை ஆணையர் அன்வர் பாஷா ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 21 காவலர்களுக்கு மெச்சத்தக்க சேவைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர சிறை துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு வழங்கப்படும் விருது மற்றும் தீயணைப்புத் துறையில் சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது தமிழகத்தை சேர்ந்த 3 வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்