அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறபு எஸ்.ஐ. பலி
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலர் உயிரிழந்தார். அரூர் வட்டம், டி.அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ., யாக பணிபுரிந்து வந்தார். இவர் சாமல்பட்டி நோக்கி சென்ற போது, மிட்டப்பள்ளி பேருந்து நிலையம் அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார். தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.