Kovai | AIADMK | அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - கோவையில் பயங்கரம்

Update: 2026-01-26 07:54 GMT

அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - 4 பேருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அதிமுக பிரமுகர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் தேனாடு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நிலையில், காரில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு சென்றுள்ளார்.

மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் முதியோர் இல்லம் அருகே காரை நிறுத்தி சிறுநீர் கழிக்க சென்றபோது, புதரில் மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல், சிவக்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது. படுகாயமடைந்த சிவக்குமாரை போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, பின்னர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காரமடை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்