Ramanathapuram | இறந்தும் வாழும் மூளைச்சாவு அடைந்த மாணவன்.. உடலை விடாமல் கட்டிப்பிடித்து கதறும் தாய்
பிளஸ் டூ மாணவன் மூளைச்சாவு - உடலுறுப்பு தானம் - இறுதி மரியாதை
ராமநாதபுரத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பிளஸ் டூ மாணவனின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், மாணவர் உடலுக்கு கோட்டாட்சியர் மற்றும் ஏராளமான அரசு மருத்துவ கல்லூரி ஊழியர்கள் மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தினர்.
மூளைச்சாவு அடைந்த17 வயது மாணவன் ராகவனின் உடலுறுப்புகள், பெற்றோர் அனுமதியுடன் தானம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இறுதி மரியாதையின் போது, சிறுவனின் உடலைப் பார்த்து அவரது தாய் கதறி அழுதது வேதனை அளித்துள்ளது