காலேஜ் டிஸ்கன்ட்டினியூ செய்த பத்ம ஸ்ரீ விருதாளரின் மகள்
கல்விக் கட்டணம் செலுத்த பணம் இல்லை என வேதனை
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த குறும்பா ஓவியர் கிருஷ்ணனின் மகள் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் கல்லூரியிலிருந்து இடைநின்றதாக கூறியுள்ளார்.
குறும்பா பழங்குடியின மக்களின் கலாச்சாரம் ,வழிபாடு, பண்டிகைகள், தொழில் ஆகியவற்றை மையமாக வைத்து குறும்பா ஓவியங்களை வரைந்து புகழ் பெற்றவரான கோத்தகிரியைச் சேர்ந்த கிருஷ்ணனுக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு எதிர்பாரதவிதமாக உயிரிழந்தார். இதையடுத்து 4 குழந்தைகளையும் அவரது மனைவி கூலி வேலைக்கு சென்று கவனித்து வருகிறார்.
இதனிடையே கிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும், கணவன் இல்லாதது வருத்தம் அளிப்பதாக அவரது மனைவி சுசிலா வேதனை தெரிவித்தார்.
கணவனைப் போல் குறும்பா ஓவியத்தில் நாட்டம் கொண்ட தனது மூத்த மகள், கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் கல்லூரியில் இருந்து நின்றதாகவும், படிப்பை தொடர அரசு உதவ வேண்டுமெனவும் சுசிலா கோரிக்கை விடுத்துள்ளார்.