திடீரென கடலில் ஏற்பட்ட மாற்றம்-பக்தர்களுக்கு முறிந்த கால்..திருச்செந்தூரில் அதிர்ச்சி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் திடீரென கடல் சீற்றம் அதிகரித்ததால் பக்தர்கள் சிலர் காயமடைந்தனர். அலையில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட 4 பேரை, பாதுகாப்பு பணியாளர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அடிக்கடி இதுபோல் கடல் சீற்றம் மற்றும் கடல் உள்வாங்கும் நிகழ்வுகள் நடப்பதால், பக்தர்கள் கவனமாக நீராட கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.