சென்னை மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 99.09 லட்சம் பயணிகள், பயணம் செய்ததாக சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது. இதைவிட அதிகபட்சமாக, கடந்த ஜூலை மாதத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் மெட்ரோவில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில், டிக்கெட்டில் 20 சதவீதம் சலுகைக்கான சிங்கார சென்னை அட்டை உள்ளிட்டவையை பயன்படுத்தி பயணம் செய்தவர்களும் உள்ளனர்.