Sivagangai | 47வது ஆண்டாக முள்படுக்கையில் ஏறி சாமி ஆடி அருள்வாக்கு சொன்ன மூதாட்டி
47வது ஆண்டாக முள்படுக்கையின் மீது ஏறி அருள்வாக்கு தந்த மூதாட்டி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மூதாட்டி ஒருவர் 47வது ஆண்டாக முள்படுக்கையின் மீது ஏறி அருள் வாக்கு கூறினார். லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலை நாகராணி என்பவர் நிர்வகித்து வருகிறார். இவர் தனது 8வது வயது முதலே திருவிழாவின் போது முள்படுக்கையில் ஏறி அருள்வாக்கு கொடுத்து வந்தார். தற்போது 47வது ஆண்டாக முள்படுக்கையின் மீது ஏறி அருள் வந்து ஆடினார்.