TN Govt Employee News | அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் - அரசு முக்கிய அறிவிப்பு

Update: 2026-01-03 04:01 GMT

43,912 பேருக்கு ஓய்வூதியம் விடுவிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு

2025-26 நிதிக் கொள்கை விளக்க குறிப்பின்படி, தமிழகத்தில் தற்போது 8 லட்சத்து 22 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 98 ஆயிரம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டம் , 6 லட்சத்து 24 ஆயிரம் பேர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கீழ் உள்ளனர். 45 ஆயிரத்து 625 பேர் ஓய்வூதிய பலன்கள் கேட்டு விண்ணப்பத்திருந்த நிலையில், 43 ஆயிரத்து 912 பேருக்கு, 4,381 கோடியே, 76 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கான ஆண்டு சம்பளச் செலவு 70 ஆயிரத்து 754 கோடி ரூபாயாகயும், ஓய்வூதியதாரர்களுக்கான ஆண்டு செலவு 41 ஆயிரத்து 290 கோடி ரூபாயாகவும் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்