கெத்து காட்டி இன்ஸ்டாவில் ரீல்ஸ்... கொத்தா தூக்கிய போலீஸ் - அதன்பின் வந்த வீடியோதான் டுவிஸ்ட்

Update: 2025-06-14 05:00 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கத்தியுடன் ரீல்ஸ் போட்ட மாணவரை, காவல் நிலையம் அழைத்து போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ். இவர், கத்தி மற்றும் கம்புடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், குடியாத்தம் போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட வீடியோக்களை நீக்கி உள்ளனர். மேலும், போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பிய நிலையில், கல்லூரி மாணவர் சுரேஷ் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்