சாலை ஓரமாய் நின்ற பள்ளி ஆசிரியருக்கு நேர்ந்த அதிர்ச்சி... திக் திக் வீடியோ

Update: 2025-04-17 10:20 GMT

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில், குடிபோதையில் லோடு ஆட்டோ ஓட்டி வந்த ரமேஷ் என்ற வாலிபர், சாலையோரம் நின்றிருந்த பள்ளி ஆசிரியர் பேபி மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் ஆசிரியர் பேபி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதிமக்கள் ஆட்டோ ஓட்டுனரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்