கரூர் மாவட்டம் குளித்தலை மாரியம்மன் கோயில் திருவிழாவில் 18 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. அதில், திருவிழாவுக்கு ஆடிப்பாடி செல்வதும், மயங்கிய நிலையில் சிறுவன் கீழே கிடப்பதும் பதிவாகியுள்ளது. கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.