ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த நபர்-திருப்பத்தூரில் அதிர்ச்சி
திருப்பத்தூர் அருகே 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த நபரை கைது செய்ய கோரி சிறுமியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஏற்கனவே திருமணமாகி மனைவியை
பிரிந்த ராஜதுரை என்பவர் கடந்த 10 ஆம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் சிறுமியை மீட்டனர். ராஜதுரை தப்பியோடிய நிலையில், அவரை கைது செய்ய சிறுமியின் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர்.