சென்னையில் ஐடி நிறுவன அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி - வீட்டில் நேபாள தம்பதி செய்த வேலை

Update: 2025-05-15 13:52 GMT

சென்னை கொட்டிவாக்கத்தில் ஓய்வு பெற்ற மென்பொருள் நிறுவன அதிகாரி வீட்டில் 60 சவரன் நகையை நேபாள தம்பதி கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லக்ஷ்மண பெருமாள் தெருவில் வசித்து வரும் மகேஷ்குமார் என்பவரது வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் காவலாளியாகவும்,

அவரது மனைவி பினிதா வீட்டு பணி பெண்ணாகவும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இந்நிலையில் மகேஷ் குமார் தனது மனைவியுடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 60 சவரன் நகைகளை நேபாள தம்பதி கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து நேபாள தம்பதியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்