Serial Actress | பாலியல் தொல்லை.. நேரில் பார்க்க வருமாறு அழைத்து ரிவீட் அடித்த நடிகை
சீரியல் நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆசாமி கைது பெங்களூருவில் சீரியல் நடிகைக்கு சமூக வலைதள பக்கத்தில் பாலியல் தொந்தரவு அளித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நவீன்ஸ் என்ற பெயரில் அந்த நடிகைக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பியதுடன், எவ்வளவோ எச்சரித்தும் 3 மாதங்களாக தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அந்த நபரை நேரில் வரவழைத்த நடிகை காவல் நிலையத்தில் புகாரளித்தார். நடிகையைக் காண நேரில் வந்த போது போலீசார் அவரை கைது செய்தனர்.