கமலுக்கு கொ*ல மிரட்டல் விடுத்த சீரியல் நடிகர்..காத்திருந்த அதிர்ச்சி

Update: 2025-08-11 03:00 GMT

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் 15-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, துணை நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் சேனல் நேர்காணலில் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத் தலைவர் மவுரியா மற்றும் இளைஞர் அணி மாநில செயலாளர் கவிஞர் சினேகன் ஆகியோர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்