கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 60 லட்ச ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கையாடல் சம்பவத்தை மூடிமறைக்க வங்கி செயலாளர் முயற்சி செய்த வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. ராயப்பனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரான துரைசாமி துறை சார்ந்த அதிகாரிகளை தணிக்கை செய்ய விடாமல் உறவினர்கள் கொண்டு மிரட்டியதாகவும், தனியார் நிதி நிறுவனத்தை நாடி, 20 லட்ச ரூபாய் கடன் பெற்று இந்த கையாடலை சரி செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.