பள்ளி மாணவிகளிடம் PT சார் செய்த செயல் - காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கல்கேரி கிராமத்தை சேர்ந்த மோகன்குமார் என்பவர் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில், அங்கு மாணவிகள் சிலரிடம் தவறாக நடந்து கொண்டு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இதன் காரணமாக மாவட்ட குழந்தைகள் நன்னடத்தை அலுவலர் ரகுராம், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், மோகன்குமார் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.